வணக்கம்!!
இதோ தமிழ் புத்தாண்டில் தொட்டு தொடங்கி விட்டது என் வலை பதிவு. நிரம்ப படிக்கக் கூடியவன் என்ற ஒன்றையே தகுதியென நினைத்து தொடங்கி விட்டேன். இங்கே என் கருத்துக்கள், கனவுகள், கோபங்கள், ஆசைகள், அழுகைகள் என அனைத்தையும் பதிவு செய்வதாக உத்தேசம்.
நான் தொடங்குவதற்கு முன் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். ஏன் இந்த முயற்சி? எதற்காக இந்த பதிவு? சிறு வயது ஆசையா? ஊடக ஆர்வமா? பொழுது போக்கவா? அங்கீகாரத் தேடலா? அல்லது ஆத்மார்த்தமான தேடலா? எழுத்தாளனாக முயற்சியா? சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்புகிறேனா? எனக்கும் எழுத தெரியும் என என் நண்பர்களுக்கு சொல்லத் துடிக்கும் ஆணவமா?
எனக்குத் தெரியவில்லை.
தமிழில் எழுதியே பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழில் சிந்திக்கக் கூட முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு அச்சம் என்னுள் வரத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தை உங்களை போன்ற சக வலைப் பதிவாளர்களின் விமர்சனங்களின் மூலம் களைந்தெறிய நான் எடுக்கும் ஒரு சுயநல முயற்சி. அவ்வளவே!!! மற்றபடி இந்தப் பதிவு ஒரு தனி மனித உணர்ச்சிகளின் வடிகாலாக மட்டும் இல்லாமல், வேறு சிலரின் உணர்ச்சிகளை சிறிதேனும் வருடிச் செல்ல முயலுமாயின் மகிழ்ச்சி.
செம்புனல் என்றால் புது மழை நீர் என்று ஒரு பொருள் உண்டு. அது என்றும் கலங்கி இருப்பது போல் இதில் சிற்சில பிழை இருப்பின் அதை பொறுத்து, திருத்த வேண்டுகிறேன்.
தினம் எழுதுவதற்கு நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. தினம் எழுதத் தெம்பில்லாமல் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையேனும் எழுதலாம் என்று எண்ணி இருக்கிறேன். இத்துணை பெரிய ஒரு வாய்ப்பை மிக எளிதாக்கிய தொழில்நுட்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, நீங்கள் நிச்சயம் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ என் வலை பதிவு தங்கள் விமர்சனத்துக்காக.
நன்றி.
சரவணன்.
என்னைப் பற்றி ...
பெயர் - மு சரவணன்
வயது - 29
படித்தது - இயந்திரப் பொறியியல்.
வேலை - மென்பொருள்
வசிப்பது - நியூயார்க் நகரம்
சொந்த ஊர் - சென்னை, மயிலாடுதுறை.
Tuesday, April 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Saravanan has been a pioneer in every activity he has undertaken. I wish him all success in his new passion. I hope he continues to entertain us with his writing too.
Saravana
Its nice to see your blog writing. Why can't we write comments in Tamil ?
Hindi katru kolvathu 60galil oru thevai. Tamizhargal velai thedi mumbai, delhi, bhopal pondra idangaluku ponapothu athu oru thevai. Indru UK, US pondra idangaluku sellumpothu epidi aangilam oru thevayo athai pole. Indralavum hindi teriavilai endru vekkam vendam, enaku kannadamo, malayalamo teriadu - teriadadu enakku kuraiyilai, ammozhigalukum izhapilai. Kattaya tamizh padam oru poli thinipaaka irukumo endru nambukiren. Nalla ezuthalargal, ilakiyavaathigal eliya makkaluku purium vagayil tamizh ezuthuvargal endral - indrum tamizh padika makkal aarvamaaga irukeerargal - Indrum ponniyin selvan virkapadugirathu, padikka padigirathu.
ஸ்ரீராமன்,
நீங்கள் சொல்வது உண்மை தான். 60களில் அது ஒரு தேவையாகவே இருந்தது என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் அதை ஒரு காரணமாகக் கொண்டு தமிழ் படிக்கத் தவறியதை நியாயப் படுத்த முடியாது. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் ஒருவர் தமிழை ஒரு ஆரம்பநிலைப் பாடமாக கூட படிக்காமல் முதுநிலை வரை படிக்க முடியும் என்பது உண்மை தான். அதை தடுக்க இந்த சட்டம் தேவையான ஒன்று தான். ஆனால் இதில் சில நெளிவு சுளிவுகள் இல்லாமல் இல்லை. இது எவ்வாறு செயல் படுத்தப் படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் முழு வடிவம் தெரியவரும்.
Post a Comment